ஜம்பர் ஆடை அணிய வேண்டி வந்தால், அதற்கும் தான் தயார் - சபாநாயகர்

நீதிக்காக சிறைச்சாலையில் ஜம்பர் ஆடை அணிய வேண்டி வந்தால், அதற்கும் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதிலும் போலியான ஆவண தயாரிப்பில் ஈடுபட்டதில்லையெனவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகரில் விருப்பமில்லாது போனால், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து தன்னை நீக்கிவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...