“பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது” மகிந்த

NEWS
0 minute read
“பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலேயே தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற இன்றைய அமர்வையும் புறக்கணித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, “பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது அப்படி நிறுத்துவதாயின் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் சபாநாயகரின் செயற்பாடு சட்ட விரோதமானது” எனவும் தெரிவித்துள்ளார்.







Tags