அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு

அக்கரைப்பற்று பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று முன் தினம் (26) இரவு விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, தலைக்கவசமின்றி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளை பிறப்பித்த போதிலும், அதனை மீறிப் பயணிப்பதற்கு ஓட்டுனர் முயற்சித்ததாகவும் இதன்போது பொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, 23 மற்றும்18 வயதுடைய அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளைச் சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...