பிணைமுறி தொடர்புடையவர்களின் பெயர் விபரம் வெளியிடப்படும் - எச்சரிக்கை

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வாரங்களில் பிரபலப்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியே வரும்போது யார்யார் இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்று தெரிந்துக்கொள்ள முடியும் என்றார்.

தற்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குறித்த விடயம் வெளியிடப்பட்டவுடன் இந்த ஆர்ப்பாட்டங்களை நிறுத்தி விடுவரென்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன தெரிவித்தாகவும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...