ரணில் விடுத்த கோரிக்கை, ஏற்றுக் கொண்ட கோட்டா!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நடப்பு அரசியல் முறுகலை தீர்ப்பது குறித்தே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறவேண்டுமெனில் அவருக்கு தேவையான உரிய பாதுகாப்பு அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணிலின் கோரிக்கைக்கு அமைய தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாக கோத்தபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ரணில் விடுத்த கோரிக்கை, ஏற்றுக் கொண்ட கோட்டா! ரணில் விடுத்த கோரிக்கை, ஏற்றுக் கொண்ட கோட்டா! Reviewed by Ceylon Muslim on November 02, 2018 Rating: 5