ரணில் முகத்தை பிடிக்கவில்லையென்பதற்காக பாராளுமன்றத்தை கலைக்க முடியுமா? - சுமந்திரன் கேள்வி

Ceylon Muslim
0 minute read
“ஜனாதிபதி பிரதமரின் முகத்தை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அதற்காக அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாமா?” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் கேள்வியெழுப்பினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் திடீரெனக் கலைக்கப்பட்டது. ஜனாதிபதியின் இந்தச் செயலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்புகள் உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று இடம்பெற்றுன.
இதன்போது தனது வாதத்தை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், “ஜனாதிபதி பிரதமரின் முகத்தை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அதற்காக அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாமா?” எனக் கேள்வியெழுப்பினார்.
To Top