தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதே எனது நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாதங்களில் அனைத்தையும் மாற்றுவதற்கு தான் வித்தைக்காரன் அல்லவென அவர் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பிரதமர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம், அவ்வாறு செய்யலாமல் கூட போகலாம். எனினும் குழப்பமான நிலையில் தேர்தலை ஒன்றை நோக்கி பயணிப்பதே எனது இலக்கு என பிரதமர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் தான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை கூட்டினாலும் பெரிய பிரச்சினை ஏற்படாது என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் பிரதமர் செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விரைவில் பொதுத் தேர்தல் - பிரதமர்
November 02, 2018
0 minute read
Share to other apps