மைத்திரிக்கு எதிரான வழக்கின் முக்கிய தீர்ப்பு இன்று 04 மணிக்கு அறிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பை இன்று (13) மாலை 4 மணிக்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய குழுவினால் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை கடந்த 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. 

அதனடிப்படையில் இன்று குறித்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மைத்திரிக்கு எதிரான வழக்கின் முக்கிய தீர்ப்பு இன்று 04 மணிக்கு அறிப்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...