தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Dec 4, 2018

கோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கான வழக்கு ஜனவரியில்....

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2019 ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த வழக்கை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Post Top Ad

Your Ad Spot

Pages