18ம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வோம் - மகிந்த அணி

NEWS
0 minute read
எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் பிரதமராகத் தொழிற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடையை விலக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லையெனவும் அதனை 18ம் திகதி சபை சென்று நிரூபிக்கப் போவதாகவும் மஹிந்த அணியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags