சுதந்திர கட்சியின் 20 பேர் UNP யுடன்...

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தூய்மையான புதிய அமைச்சரவை பதவிப்பிரமானம் செய்து கொள்ளுமெனவும் தெரிவித்தார். 

அலரி மாளிகையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எம்முடன் இணைந்தால் அதனை வரவேற்கின்றோம். ஆனால் அவர்கள் குழுவாக எம்முடன் இணைவதற்கு இடமளிக்கப்போவதில்லை. தனித்தனி உறுப்பினர்களாக இணைந்தால் மாத்திரமே இணைத்துக்கொள்ள தயாராகவுள்ளோம். 

அவர்களில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்ற நால்வர் உள்ளடங்களாக 20 பேர் ஐ.தே.கவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் அந்த 20 பேரும் குழுவாக வருவார்களானால் நாம் இணைத்துக்கொள்ளப்போவதில்லைஈ எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...