இன்று, 20 பேர் அமைச்சராகின்றனர்

20 புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.எஞ்சிய அமைச்சர்கள் நாளைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பதவிப் பிராணம் செய்துக் கொள்ளவுள்ள அமைச்சர்களது பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை, 30 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், 40 பேர் கொண்ட பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களும் இதற்குப் பின்னர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, 20 பேர் அமைச்சராகின்றனர் இன்று, 20 பேர் அமைச்சராகின்றனர் Reviewed by NEWS on December 19, 2018 Rating: 5