காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலத்தின் முப்பெரும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (30) பாடசாலை அதிபர் எஸ்.ஐ.யஸீர் அறபாத் தலைமையில் ஹிழுறிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு மற்றும் மாணவர்களுக்கான முன்னேற்ற அறிக்கையுடன் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் ஆசிரியர் தின நிகழ்வு என நடைபெற்ற முப்பெரும் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் அவர்கள் விஷேட அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நினைவுச்சின்னங்கள்,பரிசில்கள் வழங்கி கெளரவித்தனர்.
இந் நிகழ்வில் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் நிகழ்வுகள் -2018
December 03, 2018
0 minute read
Share to other apps