இந்த ஆண்டில் 430 கிலோ ஹெரோயின் மீட்பு - 37,304 பேர் கைது !

இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் சுமார் 5166 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சுமார் 430 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
அதேநேரம் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமாக நாடு முழுவதும் 37,304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் நேற்று இரவு பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 2777 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...