ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிக்கு இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இவ்வாறான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து இந்த நிலைப்பாட்டுக்கு கட்சி வந்துள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், தற்போது, ஐக்கிய தேசிய முன்னணிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி தவிர, 103 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது.
குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் என்று கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின் போது, ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில், ஐ தே மு குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவையே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.
தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் ஜனாதிபதி பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி!
December 04, 2018
1 minute read
Share to other apps