பொலிஸார் சுட்டுக்கொலை ; அடுத்தடுத்து விசாரணைகள் தொடர்கிறது

மட்டக்களப்பு- வவுணத்தீவு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பல கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதற்கமைய பொலிஸ் அதிகாரிகளின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகார்கள் குழு​வொன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் ​தொடர்புடைய புலனாய்வு பிரிவின் தலைவர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்றும், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, எதிர்வரும் நாள்களில் சந்தேகநபர் குறித்த சகல தகவல்களையும் வெளிப்படுத்த முடியும் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த ​பொலிஸ் கான்ஸ்டபிள்களின் கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 48 வயயதுடைய நபரொருவர் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...