கத்தாரில் மாவனல்லையின் "லெக்செஸ்” கிரிக்கெட் அணி சாம்பியன்


கத்தாரில் KJC அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த “KJC Cricket Battle 2018” ன் மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டியில் சாம்பியன்சாக மாவனல்லையின் "லெக்செஸ்" அணி முடிசூடிக்கொண்டது. பல தலை சிறந்த அணிகளை எதிர்த்து விளையாடிய இந்த அணி சிறந்த முறையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை கொண்டாடும் முகமாக தமது அணி வீரர்களுக்கான இராபோசன நிகழ்வொன்றை 30 நவம்பர் 2018 (நேற்று), கத்தாரில் லக்பிம உணவகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது.

கடந்த 23 நவம்பர் 2018 அன்று, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி "கத்தார் பௌண்டேஷன் கிரிக்கெட் அரங்கில்" மிகவும் கோலாகலமாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியது, KJC அமைப்பானது இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை இரண்டாவது வருடமாகவும் வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.KJC அமைப்பானது கத்தாரில் வாழும் கிருங்கதெனிய (மாவனல்லை) சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் அமைப்பு ஆகும். இதன் அடிப்படையில் கத்தார் வாழ் மாவனல்லை  சகோதரர்களின் சகோதரத்துவத்தை பலப்படுத்தவும் ஒற்றுமையை நிலை நிறுத்தவும் மாவனல்லையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு பதினோரு பேர் கொண்ட கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

சென்ற ஆண்டைப்போலவே இவ்வாண்டும் Lexus, United, Baduriyans, Manchester United, Red Side மற்றும் Lucky Boys போன்ற சிறந்த அணிகள் பங்குபற்றியிருந்ததுடன், நூற்றுக்கும் அதிகமான கத்தார் வாழ் மாவனல்லை மக்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் மாவனல்லையின் தலை சிறந்த பாடசாலைகளான ஸாஹிரா கல்லூரி மற்றும் பதுரியா கல்லூரி இரண்டுக்கும் இடையிலான நட்பு ரீதியான போட்டியானது மிகவும் விறு விறுப்பாகவும் பலரினதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் இடம் பெற்றது. இதில் இரு பாடசாலைகளை சேர்ந்த கத்தார் வாழ் பழைய மாணவர்கள் தத்தமது பாடசாலைகளுக்காக களமிறங்கினர். இதில் பதுரியா கல்லூரி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஷம்ரான் நவாஸ் (துபாய்)


கத்தாரில் மாவனல்லையின் "லெக்செஸ்” கிரிக்கெட் அணி சாம்பியன் கத்தாரில் மாவனல்லையின் "லெக்செஸ்” கிரிக்கெட் அணி சாம்பியன் Reviewed by Ceylon Muslim on December 03, 2018 Rating: 5