தேர்தலை நடாத்துமாறு நீதிமன்றத்தை நாடும் மகிந்த

NEWS
0 minute read
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தலை நடத்தாமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு குற்றம் சுமத்துவதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)
To Top