குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு.

FILE IMAGE
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்பிரியத்தாவெல பகுதியில் குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவன் இன்று(09) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே இடத்தைச் சேர்ந்த உசன்கனி ரிப்னாஸ் எனவும்  பொலிஸார்  தெரிவித்தனர்.

விடுமுறை தினமான இன்று தனது வகுப்பு மாணவர்களுடன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று காலை 11 மணியளவில் வீட்டாருக்குத் தெரியாமல் குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

சக நண்பர்களுடன் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த வேளை ஆழமான பகுதிக்கு சென்றதினால் நீரில் மூழ்கி உள்ளதாகவும் இதனை அடுத்து கிராம மக்கள் சிறுவனின் சடலத்தை தேடி உள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

முஹம்மட் ஹாசில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...