மீண்டும் அரசியலமைப்பை மீறிய மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களுக்கான அதிகாரத்தை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசியலமைப்பினை மீண்டும் மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் சமகால அமைச்சரவை செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையின் 49 உறுப்பினர்களின் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவின் மூலம் அமைச்சர்கள் இல்லாத போது, அமைச்சின் செயலாளர்களும் பணியாற்ற முடியாது என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் செயற்பட நிலையில், அவர்களின் அதிகாரங்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்குவதாக நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி மீண்டும் அரசியலமைப்புக்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 52 (3) ஆவது பிரிவுக்கு அமைய, அரசியலமைப்பின் 48 (2) ஆவது பிரிவின் கீழ், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், அமைச்சரவை பதவி இழக்கும் போது, அமைச்சுக்களின் செயலர்களும், பதவி இழந்து விடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள சூழலிலும், அதனை அடிப்படையாக வைத்து பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ள சூழலிலும், அமைச்சுக்களின் செயலர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் தாங்கள் கையெழுத்திடுகின்ற அமைச்சுக்களின் ஆவணங்கள் தொடர்பாக அரசியலமைப்பின் 52 (3) பிரிவின் கீழ், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று, அமைச்சுக்களின் செயலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், இதற்கு எதிராக, யாரேனும் பொதுமக்கள், பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் சட்டக்கோவையின் 114 / 115 பிரிவின் கீழ், முறைப்பாடு செய்ய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்