எதிர்க்கட்சி தலைவர் பதவி மகிந்தவுக்கு..?

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர்வதை சபாநாயகருக்கு தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்க எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையடல் செவ்வாய் கிழமை காலை இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி மகிந்தவுக்கு..? எதிர்க்கட்சி தலைவர் பதவி மகிந்தவுக்கு..? Reviewed by NEWS on December 16, 2018 Rating: 5