"ரணில் அரசை மீண்டும் கவிழ்ப்போம் " மஹிந்த

பதவிகளிலிருந்து விலகிச்செல்வது தமக்கு பிரச்சினை இல்லை எனவும் தற்போதைய அரசாங்கத்தை விரைவில் கவிழ்ப்போம் எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று தங்காலை கார்ல்டன் இல்லத்தில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனை கருத்திற்கொண்டு பதவியை கொடுத்து விட்டு வந்தேன். அது ஒரு பெரிய விடயம் அல்ல, மக்கள் என்னோடு இருப்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. எனவே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரம் அவர்களிடமிருந்து நாட்டை காப்பதற்காக மீண்டுமொருமுறை அவர்களது ஆட்சியை அவர்கள் நினைக்காத நேரத்தில் கவிழ்ப்போம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...