நாமலின் தொலைபேசியில் அழிக்கப்பட்டவை எடுக்க சென்ற குழு நாடு திரும்பியது!

நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக ஹொங்கொங் நோக்கி சென்ற குழுவினர் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 8 ஆம் திகதி இரவு குறித்த மூவரடங்கிய குழுவினர் ஹொங்கொங் நோக்கி சென்றிருந்தனர். 

இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டிருந்த பல்வேறு ஒலிப்பதிவுகள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த ஒலிப்பதிவுகள் அடங்கிய பென் டிரைவ் (Pen Drive) இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த ஒலிப்பதிவுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமலின் தொலைபேசியில் அழிக்கப்பட்டவை எடுக்க சென்ற குழு நாடு திரும்பியது! நாமலின் தொலைபேசியில் அழிக்கப்பட்டவை எடுக்க சென்ற குழு  நாடு திரும்பியது! Reviewed by NEWS on December 19, 2018 Rating: 5