பிரதமராகுமாறு தனக்கு பத்து தடவைகள் அழைப்பு : சஜித்!

பிரதமராகுமாறு தனக்கு பத்து தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு 14 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 10 தடவைகளும் பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறியதைப் போன்று சபாநாயகரும் 14 தடவைகள் பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறினார் எனத் தெரிவித்த சஜித், தனக்கு சுய கௌரவம் பெறுமதியானதைப் போன்று தனது தந்தையும் பெறுமதியானவர், தாயும் பெறுமதியானவரென சஜித் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...