தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Dec 4, 2018

டயஸ்போறா, RSS போன்ற விசம சக்திகள் இலங்கையில்? (போராட்டம்)

ஏம்.ஐ.அஸ்பாக்

'இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் சாத்தியம் உள்ளது. மீண்டும் நாம் சந்தோசங்களை தொலைத்து அபாயம் சூழ்ந்த நிலையில் அச்சத்துடன் வாழும் நிலையை உருவாக்கும் வகையிலேயே இரண்டு பொலிஸார் சுட்டுக்கொள்ளப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அல்-கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாறூன் ஸஹ்வி தெரிவித்தார். 

அன்மையில் வவுணதீவில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டு சுட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். இச்செயலை கண்டித்து நேற்று 03.12.2018 திங்கட்கிழமை மாலை  ஓட்டமாவடியில் எதிர்ப்புப் பேரணி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

தமிழ் ஈழ விடுதலைப் புலியில் இருந்து புனர்வாழ்வு பெற்ற இன்பராசா என்பவர் முஸ்லிம்களிடம்ஆயுதம் இருப்பதாக அண்மையில் பரப்பிய செய்தி எவ்வளவு பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள இச்சம்பவமானது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

'டயஸ்போறா' மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற விசம சக்திகள் எமது இலங்கை திருநாட்டை மீண்டும் போர்க்காடாக மாற்ற முனைகின்றனர். இது விடையத்தில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அண்மையில் இன்பராசா வெளியிட்ட கருத்துக் கூட அரசாங்கத்தின் கவணத்தை முஸ்லிம்களின் பக்கம் திசை திருப்பிவிட்டு இவ்வாறான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் நோக்கில் கூட இருக்கலாம். ' எனவும் தெரிவித்தார்.

இப்பேரணியில், முன்னாள் கடற்றொழில் நீரியல்வள பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் இணைப்பாளர் ஐ.எம். றிஸ்வின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாஞ்சோலை வட்டார அபிவிருத்திக் குழு தலைவர் ஏ.எச். நுபைல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Post Top Ad

Your Ad Spot

Pages