தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பில் இம்மாதம் ரூ. 44இலட்சம் அபராதம்!

   -டிசம்பர் மாதம் மாத்திரம்ரூ. 63இலட்சம் அபராதம்
  - கடந்த வருடம் ரூபா 9கோடி 47லட்சம்அபராதம்
 

நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் மூலம் இம்மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாத்திரம் ரூபா 63இலட்சத்து 20ஆயிரம் அபராதம்விதிக்கப்பட்டுள்ளது.


பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜனவரி 27ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட 905 சுற்றிவளைப்புகளில் 1,328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் ரூபா 63இலட்சத்து 20ஆயிரம் (ரூ. 63,20,000) அபராதமாக பெறப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 23,532 சுற்றிவளைப்புகளில் 22,571 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அதன்மூலம் ரூபா 9கோடி 47லட்சத்து 71ஆயிரத்து 950 (ரூ.94,771,950) அபராதம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்மாதம் ஜனவரி 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட 283 சுற்றிவளைப்புகளில் 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து ரூபா 966,000 அபராதம் பெறப்பட்டுள்ளது எனவும் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages