8 மாணவர்கள் கைது விவகாரம் : ACMC சட்டத்தரணிகள் குழு விரைகிறது

ACMC \ ALL CEYLON MAKKAL CONGRESS
ஹொரவாப்பத்தன, கிரிலாகல தூபியின் மீது ஏறி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. 

எதிர்வரும் புதன்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்டத்தரணி குழு ஒன்று கட்சியின் சட்டப்பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையில், அநுராதபுரம் ஹொரவப்பத்தானைக்கு விரைகிறது. மாணவர்களை விடுதலை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து சட்டத்தரணி குழு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளது. 

இந்த மாணவர்களின் விடுதலை குறித்து தொல்பொருள் திணைக்களத்துடன் சம்மந்தப்பட்ட கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச உடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொலைபேசியின் ஏற்கனவே உரையாடி உள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து இந்த விடுதலைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளார். 

”ஒருவருடத்திற்கு முன்னர் நடந்த இந்த சம்பவம்  மீண்டும் முகநூலில் பகிரப்பட்டதனாலயே இந்த விடயம் தற்போது பூதாகரமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வேண்டுமென்று இவ்வாறான செயலை மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட தூபிக்கு அருகில் எந்தவகையான இது தொடர்பான அறிவுறுத்தல் பலகைகளும் போடப்படவில்லை. எனவே அறியாத்தனமாக நடந்த இந்த விடயத்தை கருணை கொண்டு மன்னித்து மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் “அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைச்சர் சஜித்துடன் தொலைபேசியின் வேண்டுகோள் விடுத்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...