போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஹொரவ்பொத்தானயில் !ஜனாதிபதி முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஹொரவ்பொத்தான நகரில் அமைந்துள்ள முன்னனி பாடசாலைகளான பதியுத்தீன் மஹ்மூத் மஹா வித்தியாலயம் மற்றும் ருவன்வெலி சிங்கள மத்திய மஹா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இணைந்து அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையினை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று(25) ஹொரவ்பொத்தானயில் இடம்பெற்றது.

இந்த நடைபவனியில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு தெடர்பில் பல கோசங்களை எழுப்பியவாறு "மது உயிருக்கு கேடு!! நாட்டுக்கும் கேடு!! என்றவறான பல பதாதைகளை ஏந்தி இருந்தனர்.


மேலும் இந்த நடைபவனியானது ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தின் போதை ஒழிப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் பாடசாலையில் ஆரம்பமாகி ஹொரவ்பொத்தான நகரின் ஊடக இலங்கை வங்கி கிளை வரை சென்று மீண்டும் நகரின் ஊடக பாடசாலையை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...