பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் விட்டமையானது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி செய்த மாபெரும் தவறு என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

‘அத்துடன் அண்மையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு அதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாதது இன்னொரு பெரும் தவறாகும்.

கட்சியின் யாப்பை மீறுகின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதன் மூலமே கட்சியை நிலைப்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share The News

Post A Comment: