மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதே சிறந்தது - மஹிந்த+தேசப்பிரிய சந்திப்பு

Ceylon Muslim
0 minute read
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதே சிறந்தது என்பது தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தாகும் என்று அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலார்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறினார். 

தற்போதை நடைமுறையில் இல்லாத புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதைவிட பழைய முறைப்படி தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். 

அதேவேளை தேர்தலை நடத்தாதிருப்பது குறித்து தான் வருத்தமடையவில்லை என்றும், மக்களின் வாக்குரிமைய இல்லாது போவது குறித்து தான் தனிப்பட்ட ரீதியில் வருத்தமடைவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

To Top