மீண்டும் பதற்றம் அடையுமா இலங்கை அரசியல் ?


இலங்கையிலுள்ள சகல மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று சற்றுமுன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இதுதொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இந்த சந்திப்பின் பிரகாரமே மேற்படி ஒரே தினத்தில் தேர்தலை நடத்தலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேர்தலை எப்போது எந்த முறைப்படி நடத்துவது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவந்துள்ள அதே நேரம், இது தொடர்பான கட்சித் தலைவர்கள் சந்திப்பும் அடுத்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜூலை மாதமளவில் தேர்தலை நடத்துவது குறித்த பேச்சுக்கள் அடிபடுவதாகவும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் இணைவுகள் குறித்து மீண்டுமொரு பரபரப்பான நிலை தோன்றும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...