முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து

முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து ஏற்­படும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்கள், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி என்­ப­னவற்றின் தேவைக்­கேற்ப நாட்டை அழி­வுக்­குள்­ளாக்க ஒரு போதும் இட­ம­ளிக்க முடி­யாது. இவர்­க­ளி­ட­மி­ருந்து நாட்டை பாது­காக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்­கிறோம். என சிங்­களே விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அக்­மீ­மன தயா­ர­த்ன தேரர் தெரி­வித்தார்.

தெஹி­வளை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற சிங்­களே விடு­தலை முன்­ன­ணியின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது:

இன்று புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்கி நாட்டை சமஷ்டி ஆட்­சி­மு­றைக்கு உட்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்றால், 1976 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க மற்றும் 1977 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜய­வர்­தன போன்று தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மாக மக்கள் முன்­வைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தலில் அது வெற்றி கொள்­ளப்­பட வேண்டும். தேர்­தலில் மக்கள் ஆணையை பெற்­றி­ருக்க வேண்டும்.

இன்­றைய அர­சாங்கம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் தேவை­க­ளுக்­க­மை­வாக செயற்­ப­டு­வதால் நாட்டில் பல பிரச்­சி­னைகள் தலை­தூக்­கி­யுள்­ளன.

இன்று நாட்டை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆள­வில்லை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும், என்.ஜி.ஓ.க்களுமே ஆட்சி செய்­கின்­றன.

வடக்கு முழு­மை­யாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தேவை­க­ளுக்கு அமை­வா­கவே ஆளப்­ப­டு­கின்­றது. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பௌத்த குரு­மார்­களை விரல் நீட்டி எச்­ச­ரித்­தி­ருக்­கி­றார்கள். வடக்கில் இயங்­கி­வரும் பெளத்த விகா­ரைகள் இந்து கோயில்­க­ளென தெரி­வித்­துள்­ளார்கள்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு இந்த அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை வழங்­க­வில்லை. தமிழ், முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் இந்த நாட்டை ஆட்­டிப்­ப­டைக்­கி­றார்கள் அதற்கு அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

இன்று நாட்டில் ஒவ்­வொரு பிர­தே­சத்­துக்கும் ஒவ்வொரு வித­மாக சட்டம் அமுல் நடாத்­தப்­ப­டு­கி­றது. வடக்கில் ஒரு சட்டம் தெற்கில் ஒரு சட்டம். வடக்கில் கேரளா கஞ்­சா­வுடன் கைதான ஒருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவரின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டார். தெற்கில் ஹெல்மட் இல்லாமல் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார், அபராதம் விதிக்கப்படுகிறார். இதற்கு பொலிஸ்மா அதிபர் பதில் கூற வேண்டும் என்றார். 
முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து Reviewed by NEWS on January 23, 2019 Rating: 5