வெளிநாடுகளிலுள்ள பாராளுமன்றங்களைப் போன்று, இலங்கையிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கம் மீறி செயற்படுவது தொடர்பில் முறையான சட்டமொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் கரந்தெனிய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இப்பாடசாலையின் 75 வருட நிறைவையொட்டி பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சியிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்: அண்மையில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற மோசமான நிகழ்வுகளை நான் குறிப்பிடத் தேவையில்லை. பாடசாலைகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் மாணவர்கள் நடந்துகொள்ளும் விதமாகவே பாராளுமன்றத்தில் சில எம்.பிக்கள் செயற்பட்டனர். அவ்வாறு செயற்படுவது நாட்டுக்கு முன்மாதிரியாகாது. அதற்காக, நான் வெட்கப்படுகின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செயற்படும் போது நாடு எவ்வாறு முன்னேற முடியும். பாராளுமன்றத்தை சிலர் கால் துடைப்பமாக எத்தித்தள்ளி விட்டனர். இவ்வறான செயற்பாடுகளால் நாட்டில் ஜனநாயக அரசியல் இல்லாதொழிந்து போகும்.
பிரிட்டிஷ் பாராளுமன்ற முறையை பின்பற்றி விரைவில் புதிய ஒழுக்கக் கோவை சட்டம் !
January 10, 2019
1 minute read
Share to other apps