மூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் தேர்தல் - ஒப்பமிட்டார் ஜனாதிபதி

மூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

றிலங்காவில் உள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாகவே, தற்போது, செயற்பாட்டு நிலையில் உள்ள, தென் மாகாண சபை, ஊவா மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகியவற்றைக் கலைக்க, சிறிலங்கா அதிபர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.

இது தொடர்பான ஆவணத்தில் அவர், பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னரே கையெழுத்திட்டு விட்டார் என்றும், இந்த அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம், ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் தேர்தல் - ஒப்பமிட்டார் ஜனாதிபதி மூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் தேர்தல் - ஒப்பமிட்டார் ஜனாதிபதி Reviewed by Ceylon Muslim on January 21, 2019 Rating: 5