ஐபோன் விலை குறைப்பு!

Ceylon Muslim
0 minute read
   TOP STORY!

Image result for iphoneSஆப்பிள் நிறுவனம் சில ரக ஐபோன்களின் விலையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஐபோன் கைத்தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்ட 12 ஆண்டுகளில் இவ்வாறு விலை குறைக்கப்படுவது இது இரண்டாம் முறையாகும்.
 
அமெரிக்காவைத் தவிர்த்த மற்ற நாடுகளில் விலை குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துவருவதே அதற்குக் காரணம் என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. எந்தெந்த நாடுகளுக்கு விலைக்குறைப்பு பொருந்தும் என்று அந்த நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. 
 
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ஐபோன் கைத்தொலைபேசிகளின் விற்பனை சரிந்துவருகிறது. கடந்த ஓராண்டில், அமெரிக்க டொலரின் மதிப்பு 10 வீதமாக அதிகரித்துள்ளது. அதில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள், மற்ற நிறுவனங்களின் பொருட்களோடு ஒப்பிடுகையில் அதிக விலையுடையதாக இருந்துவருகின்றன.

இதனால் சந்தையில் இருக்கும் இடத்தை அந்த நிறுவனம் கணிசமாக இழந்துவருவதாய்க் கூறப்படுகிறது.
To Top