2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு இன்று அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் இந்த சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2019ம் வருடத்திற்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4,470 பில்லியன் ரூபாவாகும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக நிதியமைச்சரால் சமர்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு,

2019ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டம் தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகிறது. அரச நிதி துறைக்கான வேலைத்திட்டத்தை வலுபடுத்தம் நோக்கிலும் 2021ஆம் ஆண்டளவில் இலக்கை அடைவதற்கு திட்மிடப்பட்டுள்ள நடுத்தர அரச நிதி இலக்கை வெற்றிக்கொள்ளக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தும் பொருட்டு கடந்த வாரத்தில் நடைபெற்ற அசை்சரவை கூட்டத்தின் போது அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைவாக 2019ஆம்ஆணடு நிதியாண்டில் முதல் 4 மாத காலப்பகுதிக்கு இடைக்கால கணக்கறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரச செலவு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி புதிய ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்மிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தயரிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் பொதுச்செலவுக்காக செலுத்த வேண்டிய செலவு 2,312 பில்லியன் ரூபாவாவதுடன் அதில் 1436பில்லியன் ரூபா மீண்டு வரும் செலவினத்துக்காகவும் 876பில்லியன் ரூபா நிதி முதலீட்டு செலவாகவும் கொண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரச கடன் சேவைகள் விதவைகள் அநாதைகள் ஓய்வூதியகொடுப்பனவுகளை செலுத்துதல் ஒன்றிணைக்கப்பட்ட நிதியை செலுத்துவதற்கான அதிகாரத்தை பெற்றுள்ள செலவை மேற்கொள்வதற்காக 2232 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று அரசாங்கத்தின் முன்கொடுப்பனவு செலவு பணிகளுக்காக 6 பில்லியன் ரூபாவை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டு செலவிட எதிர்பார்த்தள்ள தொகை 4550 பில்லியன் ரூபாவாகும்.

தற்பொழுது உள்ள வரிவிகிதசார கட்டமைப்புக்கு அமைவாக 2019ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவு மற்றும் வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 2390 பில்லியன் ரூபாவாகும். இதே போன்று உள்ளுர் மற்றும் வெளிநாட்டு மூலம் பெற்றக்கொள்வதற்கு தேவையான மொத்த கடன் அளவு 2160பில்லியன் ரூபாவாகும்.

இதற்கமைவாக 2019ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றம் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்ரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share The News

Ceylon Muslim

Post A Comment: