மட்டக்களப்பில் : முஸ்லிம், தமிழ் சகவாழ்வை சீர்குலைக்க வேண்டாம்

(பஹ்த் ஜுனைட் ) 

அண்மைய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதான சகவாழ்வை சீர்குலைக்கும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தீய சக்திகள்செயற்பட்டு வருகின்றன.இவர்கள் தொடர்பில் அனைத்து மக்களும் அவதானத்ததுடன் செயற்பட வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாயல்கள்முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன சமாதான பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சமாதான பேரவையின் தலைவர் யு.எல்.எம்.என்.முபீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, அண்மையில்களுவங்கேணி பாடசாலை மாணவி ஒருவர் பலவந்தமாக இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார் என்ற பொய் வதந்தியை பரப்பி இத்தீயசக்திகள் குளிர்காய நினைக்கின்றனர்.உண்மை அதுவன்று.கடந்த 29/12/2018 அன்று குறித்த மாணவி காத்தான்குடிக்கு தனியாக வருகை தந்துவீதியில் தடுமாறியதை அவதானித்த நபரொருவர் காத்தான்குடி சம்மேளனத்தின் சமூக நலன்புரி அமைப்புக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்துஉடனடியாக தலையிட்ட சம்மேளன அமைப்பினர் இவ் யுவதியின் பாதுகாப்பை கருதி குறித்தவொரு பெண் சகோதரியின் வீட்டில் பாதுகாப்பாகதங்க ஏற்பாடுகள் செய்து மறுநாள் விஷேட ஆலோசனை கூட்டத்தை நடாத்தி மேற்படி மாணவியை விசாரித்தபோது தான் தனது 12 வயதிலிருந்துஇஸ்லாமிய மார்க்கத்தில் ஈர்க்கப்பட்டு அதை ஆராய்ந்து வந்ததாக கூறியதற்கேற்ப இவ்விடயம் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும்எனக்கருதிய சம்மேளனம் 01/01/2019இல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தி முறைப்பாடும் செய்ய வைத்ததுடன்பெற்றோருக்கும் தகவல் அனுப்பியது.தற்போது பொலிஸுக்கூடாக வைத்திய பரிசோதனையின் பொருட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் யுவதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.நிலமை இவ்வாறிருக்க பொய்யான தகவல்களை மக்களுக்கு சொல்லி அப்பாவி மக்களைமோத வைக்க முயற்சிப்பது யார்?இவர்களின் நோக்கம் என்ன? அரசியல் ஆதாயமா?

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பாடசாலைகளில் தமிழ்,முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கும் சூழ்நிலையில் இதுவரை எந்த பாடசாலையிலாவதுமுஸ்லிம் ஆசிரியர்கள் மதமாற்றம் செய்துள்ளார்களா?இல்லவே இல்லை

அண்மைக்காலங்களில் காத்தான்குடி,ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து ஒரு சில முஸ்லிம் யுவதிகள் இந்துக்களாக மதமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் கூக்குரல் இடவுமில்லை.ஆர்ப்பாட்டம் நடத்தவுமில்லை.அப்பாவி தமிழ்மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்கவுமில்லை.

கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் மிகப்பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டிய காலம் எம்மை நோக்கிவரவிருக்கிறது.இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக கருதப்படுகிறது.அரசியல் பதவியை அடைவதற்காக மக்களிடையே இனவாதத்தை தூண்டி வாக்குகொள்ளையடிக்க வரிந்து கட்டிக்கொண்டு தீய சக்திகள் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.கடந்த காலங்களில் இரண்டு சமூகமும்பிரிந்து நின்று செயற்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளை நாமே தலையில் சுமந்து அனுபவித்தோம்.நம் இரண்டு சமூகத்தையும் திட்டமிட்டுமூன்றாம் சக்தி பிரித்ததையும் நாம் அனுபவித்தவர்கள்.

மேற்சொன்ன குறித்த மாணவி மற்றும் சமாதானத்தை சீர்குலைக்கும் விடயங்கள் தொடர்பில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள்சம்மேளனம் ,மட்டக்களப்பு சர்வமத சமாதான பேரவை மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் அடிக்கடி சந்தித்துகலந்துரையாடி வருகின்றன.கடந்த 13/01/2019 அன்று பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மண்டபத்தில் முக்கிய சந்திப்பொன்றுஇடம்பெற்றது என்பதையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதோடு தீயே சக்திகளின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன்இருக்க வேண்டுமென்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன சமாதான பேரவை கேட்டுக்கொள்வதாக யு.எல்.எம்.என்.முபீன் அவரின் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...