முஸ்லிம் ஆளுநருக்கு எதிராக தமிழர்கள் மட்டக்களப்பில் எதிர்ப்பு (படங்கள்)

கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (11) காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. என தெரிவித்தாலும் இவ் ஆர்ப்பாட்டத்தை தமிழ் மக்களும் எதிர்த்து வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது. 

கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. 

ஜனாதிபதியே, பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

எனினும் முஸ்லிம் பிரதேசங்களில் அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோன்று நடைபெற்றன. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...