வீதி அபிவிருத்திகள் தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படல் வேண்டும்- நகர சபை உறுப்பினர் சிப்லி பாறூக் !

காத்தான்குடியில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள 90% வீதிகள் மோசமான நிலையிலும் உறுதியற்ற நிலையிலும் காணப்படுவது அதனுடைய அபிவிருத்தியில் இடம்பெற்ற ஊழல்களே காரணம் என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையினால் மேற்கொள்ளப்படும் வீதி அபிவிருத்திகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளில் இருந்து ஒரு சில அரசியல் வாதிகள் கொமிஷன் என்ற பெயரில் கொந்தராத்து காரர்களிடம் பணத்தை பெறுவதினால் ஒதுக்கப்பட்ட நிதியில் கொந்தரத்து காரர்களும் அவர்களது இலாபத்தை மாத்திரம் முதன்மை படுத்துவதால் வீதி அபிவிருத்தி பணிகளின் போது மோசடிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான மொசடிகளின் விளைவு வீதி தரம் குறைந்ததாகப் போடப்படுகிறது பல வருடங்கள் உறுதியாக இருக்க வேண்டிய வீதிகள் ஒரு சில வருடத்தில் சிதைவடைந்து காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

கொந்தராத்து காரர்கள் மோசடியில் ஈடுபடுகின்ற போது குறித்த அபிவிருத்தியை பொறுப்பு எடுத்துக்கொண்ட அரசியல் வாதிக்கு கேள்வி கேட்க்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது காரணம் அவர் ஏற்கனே கொந்தராத்து காரர்களிடம் பணம் பெற்று இருப்பதால் மோசடிக்கு பக்கச்சார்பாகவும் கொந்தராத்து காரர்களை பாதுகாப்பதிலும் கவனமாக செயற்படுகிறார்.

அனேகமான கொந்தராத்து காரர்கள் நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாக இருக்கிறார்கள் அபிவிருத்தி செயற்திட்ட அனுமதி துவக்கம் பற்றுச்சீட்டு தயாரிப்பது அதனை பரிசீலிப்பது போன்ற அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து கொள்கிறார்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் ஊழல்கள் அதிகம் இடம்பெறுகின்றன.

இவ்வாறான ஊழல்கள் , வீதி அபிவிருத்தியில் இடம்பெற்றுள்ள மோசடிகள் ,வீதியின் தரம் போன்றவற்றை ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழு அமைத்து ஒவ்வொரு வீதிகளுக்கு செலவு செய்யப்பட்ட விபரம், வீதியின் தரம்,வீதிகள் சரியாக மட்டம் பார்க்கப்பட்டுள்ளதா ?, தரம் இல்லாத முழுமைப் படுத்தப்படாத பணிகளுக்கு ஏன் பணம் கொடுக்கப்பட்டது என ஆராய்ந்து விசாரணை நடத்தப்படல் வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர் நகர சபை அமர்வுகளின் போது ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. எதிர்கட்சி உறுப்பினர்கள் கருத்துச் சொல்லும் போது கணக்கில் எடுக்கப்படுவதில்லை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கை இருப்பதால் எதிர்கட்சி உறுப்பினர்களின் வாக்களிப்பு வலு இழந்ததாகவே கணக்கிடப்படுகிறது .
கடந்த காலங்களில் நகர சபை தவிசாளர் தலைமையிலான குழுவினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தனர் இப் பயணங்கள் அந்த நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் கற்று அதனை நமது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இவ்வாறான பயணத்தின் போது எதிர்கட்சியில் ஆளுமை மிக்க உறுப்பினர்கள் இருந்தும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட இன்னும் சிலரும் உள்வாங்கப்பட்ட குழுவினரே பயணித்தனர்.

எனவே அபிவிருத்தி என்பது மக்கள் சேவை மாறாக அரசியல் வாதிகளின் தொழில் அல்ல இது தொடர்பில் கெளரவ நகர சபை தவிசாளர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் சுயாதீன ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் கேட்டுக்கொண்டார்.
வீதி அபிவிருத்திகள் தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படல் வேண்டும்- நகர சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ! வீதி அபிவிருத்திகள் தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படல் வேண்டும்- நகர சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ! Reviewed by Ceylon Muslim on January 22, 2019 Rating: 5