தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் விசேட கோரிக்கை

எம் சகோதரர்களுக்கான எம் குரல்
அன்புள்ள இலங்கையர்களே,

"நாம் இலங்கையர்கள்; இலங்கை எம் தாய் நாடு; 
தாய் பூமி; நாம் நம் நாட்டை அளவு கடந்து நேசிக்கிறோம்.
அதுமட்டுமன்றி இலங்கை திருநாட்டின் 
அனைத்து கலாச்சாரங்களையும் மதிக்கின்றோம். 
பல்கலைக்கழக இளம் சமுதாயமாகிய எமக்கு பிற கலாச்சாரங்களை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் கடுகளவுமில்லை."

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக நண்பர்கள் சகிதம் சென்ற சுற்றுலாவில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்விபயிலும் எம் ஏழு சகோதரர்கள் ஹொரவ்பொத்தான, கீரலாகல பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான புராதன தூபியில் ஏறி புகைப்படமெடுத்து facebook இல் upload செய்த 1 year ago memory ஐ வைரலாக்கி அவர்களை கைது செய்துள்ளமை எம்முள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

சற்று நிதானித்து நடுநிலையாக சிந்தித்துப் பாருங்கள்...

இவ்வாலிப வயதில் சென்ற இடமெல்லாம் செல்பி எடுக்கும் மோகம் இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே வழமையானதொன்றாகும்.

நாமும் அவ்வாறே......

அப்படியிருக்க இது பௌத்த மதத்தினரின் புராதன தூபி என்பதை உண்மையில் அறியாத எம் சகோதரர்கள் அதிலேறி புகைப்படம் எடுத்துள்ளனர் என்பதே உண்மை.

உண்மையில் அதிலேறி புகைப்படம் எடுப்பது பௌத்த மதத்தை அவமதிப்பது என்பதை அறிந்திருந்தால் நிச்சயம் அவர்கள் அங்கு புகைப்படம் எடுத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் உண்மையில் அவர்கள் நாட்டையும் நாட்டின் கலாச்சாரங்களையும் நேசிப்பவர்கள் என்பது எம்மோடு கற்பவர்கள் என்ற ரீதியில் நாம் நன்றாக அறிந்திருக்கின்றோம்.

அன்பர்களே,

கைது செய்தவர்கள் பற்றி அவா்களின் தனிப்பட்ட குடும்பம் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா??

2012 உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை அரச பல்கலைக்கழகங்களின் பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 1650 மாணவர்களில் உள்ளடக்கப்பட்ட இவர்கள்நாளைய இலங்கை நாட்டின் வளர்ச்சிக்காக தமது அறிவை,ஆற்றலை பயன்படுத்தக் காத்திருப்பவர்கள்.

அது மட்டுமன்றி அவ் 7 பேரில் இருவர் batch toppers என்பது விஷேட அம்சமாகும். பெற்றோரின் , ஊரின் , சமுதாயத்தின் பல கனவுகளை மெய்ப்படுத்தக் கனவு கண்டு அதனை நிஜப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கும் இச் சகோதரர்கள் தற்போது, தம்மை முற்றிலும் அறியாமல் செய்த குற்றத்திற்காக சிறைக்கைதிகளாக அழுது கொண்டிருக்கிறார்கள். அவா்களின் பெற்றோர் செய்வாதறியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .

நாட்டினை வளர்ச்சிப் பாதையில் செல்லாவிடாது தடுத்துக் கொண்டிருக்கின்ற பல கடும் குற்றங்களுக்காக ஒன்றிணையாமல் தம்மை அறியாமல் செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எம் நாட்டின் நிலமையை நினைத்து உண்மையில் வருந்துகிறோம்.

எனவே இத் தவறு எமது சகோதரர்கள் தமது அறிவுக்கெட்டி செய்த தவறல்ல என்பதை ஏற்றுக்கொண்டு இளம் எம் நெஞ்சங்களில் நாட்டின் , நாட்டின் சட்டத்தில் வெறுப்புணர்வை உண்டாக்காது அவா்களின் எதிர்காலம் கருதி பொது மன்னிப்பை வழங்குமாறு தென் கிழக்கு மாணவர் சமூகம் உரிய அதிகாரிகளை வேண்டி நிற்கின்றது 


நன்றி.
தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் விசேட கோரிக்கை தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் விசேட கோரிக்கை Reviewed by Ceylon Muslim on January 29, 2019 Rating: 5