தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jan 24, 2019

சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய நிர்மாணப் பணிகள் துரிதம் !

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் 5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் இறக்காமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை விரைவில் பூரணப்படுத்துமாறு பைசல் காசிம் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இதன் நிர்மாணப் பணிகளை இராஜாங்க அமைச்சர் ஞாயிற்றுக் கிழமை[20.01.2019] நேரில் சென்று பார்வையிட்டார்.அதன்போதே மேற்படி பணிப்புரையை வழங்கினார்.

அதேவேளை,இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டு அந்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஏ.தாஹிரிடம் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.அங்குள்ள நோயாளர் விடுதிகளையும் பார்வையிட்டார்.

அங்கு நிலவும் குறைபாடுகளை கூடிய விரைவில் நிவர்த்தி செய்து தருவதாக இராஜாங்க அமைச்சர் அந்த வைத்தியசாலை நிர்வாகத்திடம் வாக்குறுதியளித்தார்.

Post Top Ad

Your Ad Spot

Pages