அக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது

Ceylon Muslim
0 minute read
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீதிமன்ற பிடியாணைக்கு அமைவாக யங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 

அந்த உத்தரவுப்படி அவர் யங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் ஆஜராகாமையின் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

To Top