பொகவந்தலாவை தோட்டத்தில் தீ !

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவு ரொப்கில் வாணக்காடு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 12 லயம் வீடுகள் எரிந்து நாசமாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத் தீ பரவல் சம்பவம் இன்று (29) முற்பகல் 11.45 மணியளவிலே ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினால் லயம் குடியிருப்பை சேர்ந்த 12 குடும்பங்களை சேர்ந்த 54 பேர் வரையில் நிர்கதிக்குள்ளாகியுள்ளதுடன் குடியிருப்பாளர்கள் தொழில் நிமித்தம் வெளியில் சென்றமையினால் உயிராபத்துக்கள் ஏதுமில்லை எனவும் உடமைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரலுக்கான காரணம் கண்டறியாத போதிலும் பொது மக்களும் பொலிஸாரும் நோர்வூட் பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...