‘மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண முயற்சிப்போம்’

"உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகள் என்பன இடம்பெறுகின்றன. அவர்களது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும், அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது  கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம். அந்த விஷயத்தில் சம்பந்தப்படுபவர்கள் பொறுமை கடைப்பிடிப்பதும் அவசியமாகும்" என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
"அத்துடன், இந்த மாணவர்களின் மோதலுக்கு மத்தியில் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியும் நாங்கள் அறியாமலில்லை" என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில்  (01) நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றிய போதே, அமைச்சர் இவற்றைக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்