இரண்டாம் கட்டமாக அம்பியூலன்ஸ் வாகனங்கள் பெறும் வைத்தியசாலைகளின் பெயர்கள் !

Ceylon Muslim
0 minute read

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு பெப்ரவரி நடுப்பகுதியில் இரண்டாம் கட்டமாக அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.முதலாம் கட்டமாக கடந்த சனிக்கிழமை [19.01.2019] கிழக்கில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டன.அதன்போது வழங்கப்படாத ஏனைய வைத்தியசாலைகளுக்கே இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளன.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கதிரவெளி,வாழைச்சேனை,சந்திவெளி மற்றும் காத்தான்குடி ஆகிய வைத்தியசாலைகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை,கிண்ணியா,சேருநுவர, மூதூர் மற்றும் ஈச்சிலம்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில்,சம்மாந்துறை மற்றும் மத்திய முகாம் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படவுள்ளன.

இதற்கான அணைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
To Top