விலை அதிகரிப்பது குறித்து இறுதித் தீர்மானம் இல்லை !

Ceylon Muslim
0 minute read




  
சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று வர்த்தக மற்றும் வாணிப அமைச்சு கூறியுள்ளது.  
சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்காக அந்த நிறுவனங்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக கூறினார்.

உலக சந்தை விலைக்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அந்த கோரிக்கை சம்பந்தமாக அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

வர்த்தக மற்றும் வாணிப அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
To Top