திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகளுக்கு 55 பேர்ச் காணி ..யோவுன்புர 2019 என்ற இளைஞர் முகாம் தேசிய வேலைத்திட்டம் மார்ச் மாதத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 
நடத்தப்படவுள்ளது அத்தோடு இதற்கமைவாக செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக கிராம இளைஞர் பிரிவை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 இதற்கமைவாக தேசிய தயாரிப்பு செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் உன்னதமான ஊக்குவிப்பாக தமது வீட்டை நிர்மாணித்து கொள்வதற்காக 15பேர்ச் காணியும் விவசாய பணிகளுக்காக 40 பேர்ச் உற்பத்தி காணியும் இவர்களுக்கு தேவையான வழிகாட்டிகளையும் வழங்குவதற்கும் இளைஞர் விவசாய கூட்டுறவு கிராம வேலைத்திட்டத்திற்கு ஊடாக இவர்களின் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகளுக்கு 55 பேர்ச் காணி .. திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகளுக்கு 55 பேர்ச் காணி .. Reviewed by NEWS on February 14, 2019 Rating: 5