ராட்டினம் உடைந்து விழுந்ததில் தாயும் மகளும் பலி - 6 பேர் கைது!

கம்பஹா, நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள ராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 47 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன் பலத்த காயங்களுடன் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 13 வயதுடைய சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் குறித்த பூங்காவின் உரிமையாளர் உட்பட 6 பேரை வெயங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராட்டினம் உடைந்து விழுந்ததில் தாயும் மகளும் பலி - 6 பேர் கைது! ராட்டினம் உடைந்து விழுந்ததில் தாயும் மகளும் பலி - 6 பேர் கைது! Reviewed by Ceylon Muslim on February 05, 2019 Rating: 5