பாதாள உலககுழு ஷியாம் நசூல் கைது!

NEWS
0 minute read
பாதாள உலக குழு உறுப்பினரான பளூமெண்டல் சங்கவுக்கு நெருக்கமான ஷியாம் நசூல், புறக்கோட்டை ஆட்டிருப்புவீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவால் இன்று அதிகாலை ஆட்டிருப்புவீதி, கொரியாவத்தை பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 10 கிராமும் 460 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
To Top