சுப்றா நிறுவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்கிய ஹிஸ்புல்லாஹ்!

கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட நிறுவாக உத்தியோகத்தர் போட்டிப்பரீட்சையில் அதிவிசேட திறமையில் சித்தி பெற்ற சுப்றா நிறுவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிவிசேட திறமையில் பரீட்சையில் சித்தி பெற்ற சுப்றா நிறுவாக உத்தியோகத்தர்கள் 23பேருக்கான நியமனங்களே வழங்கி வைக்கப்பட்டது.

வைபவத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபய குணவர்தன கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை.சலீம் உற்பட கல்வி வீதி விவசாய சுகாதார அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...